வியாழன், ஜூலை 21, 2005

அவசரம்!

அவசரம்

அதிகாலை தலைக்கருகில்
கடிகார அழைப்பில் அவசரம்

பல் விளக்கவும், குளிக்கவும்
சுடுநீர் வரும்முன் அவசரம்

காரில் சாலை விளக்கு
பச்சைக்கு மாறுமுன் அவசரம்

பேசுகையில் கேள்வியை முடிக்குமுன்
பதில் சொல்ல அவசரம்

வேலையில், மதிய உணவில்,
மாலை காப்பியில் அவசரம்

வேலை முடிக்க, வீடு திரும்ப,
தொலைக்காட்சி பார்க்க அவசரம்

வலைத்தளத்தில் சுட்டியை சொடுக்கி
பக்கம் வரும் முன் அவசரம்

குழந்தையோடு விளையாட, உணவூட்ட,
தூங்கவைக்க அவசரம்

எல்லாம் முடித்து படுக்கையில் படுக்க
விளக்கை அணைக்கும் முன்

சுவற்றில் இந்த வாசகம்
"வாழ்க்கை ஒரு நிறுத்தமில்லா பயணம் - இறப்பை நோக்கி"

பார்த்தபின் அவசரமாக முள் திருப்பி
கடிகாரத்தில் 'எழுப்பு மணி' நிறுத்துகிறேன்!

2 கருத்துகள்:

Moorthi சொன்னது…

எந்திரமயமான வாழ்க்கையை இயல்பாய் படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள். நன்றி ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

பாராட்டுக்கு நன்றி மூர்த்தி!