'நல்லது உரைத்தாய், நம்பி! இவன் நவையே செய்தான் ஆனாலும்,
கொல்லல் பழுதே' - 'போய் அவரைக் கூறிக் கொணர்தி கடிது' என்னா,
'தொல்லை வாலை மூலம் அறச் சுட்டு, நகரைச் சூழ்போக்கி,
எல்லை கடக்க விடுமின்கள்' என்றான்; நின்றார் இரைத்து எழுந்தார்.
அனுமன் வாலைச் எரியூட்டுமாறு இராவணன் ஆணையிட்டது - கம்ப ராமாயணம், சுந்தர காண்டம். இதன் பலனை அன்று இலங்கை அனுபவித்தது. லூசியானோ மாரெஸ்க்கு கம்பராமாயணம் தெரியததால் தன் வீட்டையும் பொருட்களையும் இழக்க வேண்டிய துர்பாக்கியம்!
நியூமெக்ஸிகோவில் தன் வீட்டில் பிடித்த எலியை கொல்ல வெளியே எரிந்து கொண்டிருந்த தீயில் தூக்கியெறிய, அது எரிந்து கொண்டே திரும்ப வீட்டிற்குள் ஓடி வந்து ஓளிய, வீடு தீப்பற்றி எல்லாப் பொருளும் நஷ்டம்! தேவையா?!
2 கருத்துகள்:
Penny wise Pound foolish என்பது இது தானோ?
ஆமாம் சார் - 'கெடுவான் கேடு நினைப்பான்'. நிச்சயம் எலி தப்பித்திருக்குமென்று நான் நினைக்கிறேன்.
கருத்துரையிடுக