இரண்டு மூன்று வாரங்களாக தொலைக்காட்சியிலும், இணையத்திலும் பார்த்த, படித்த சில செய்திகளின் விளைவு - இந்த மூன்று மூன்றுவரி ஆறு வார்த்தைக் கவிதைகள்.
மௌனத்தின் இரைச்சல்
கேட்க முடியவில்லை!
ஊமையின் பாஷை.
விஷப் புரளி
சாக்கடையில் சோறு!
பசியோடு பார்வை.
தியாகியா தீவிரவாதியா?
எப்படி அழைத்தாலும்
போனது உயிர்தானே!
6 கருத்துகள்:
நல்லா இருக்கு ரங்கா..
நீங்க எழுதிய கவிதைகளா?
அனுபவித்தேன்.. இரண்டாவது மனதைத் தைத்தது...
அன்புடன்
சீமாச்சு...
ஆமாம் சீமாச்சு, நான் எழுதியதுதான். திருவிளையாடல் தருமி நினைப்புக்கு வருதா? "பின்னே? மண்டபத்துல யாராவது எழுதிக் கொடுத்து அதையா நான் வாங்கிட்டு வந்திருக்கேன்? என்னுடையது தான், என்னுடையது தான், என்னுடையது தான் ஐயா!" ;-)
பாராட்டுக்கு நன்றி.
ரங்கா.
//தியாகியா தீவிரவாதியா?
எப்படி அழைத்தாலும்
போனது உயிர்தானே!//
இது மனதைத் தைத்தது அண்ணா.
பாராட்டுக்கு நன்றி குமரன். வேலையெல்லாம் எப்படி? பிஸின்னு சொன்னீங்களே?
ரங்கா.
Ranga,
Nalla varigal
manidha neyam patri niriya ezhudungal
thamiz manathil manidha neyam ongi perugi aarai odattum.
ozhippom pagaimaiyi
velvom anbal anaivaraiyum
Vidadhu anbudan.
Mayilsamy
பாராட்டுக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி மயில்சாமி. உங்களுடைய எண்ணங்கள் உயர்ந்தவை.
ரங்கா.
கருத்துரையிடுக