பிரபஞ்சத்தின் வயது என்ன?
இந்த வருடம் பிப்ரவரியில் லாரன்ஸ் க்ராஸ் மற்றும் பிரயன் (ச்)சபோயர் என்கிற இரண்டு இங்கிலாந்து விஞ்ஞானிகள் இப்பிரபஞ்சத்தின் வயதைப் பற்றிய அனுமானத்தை வெளியிட்டனர். அவர்கள் இப்பிரபஞ்சத்தின் வயது கிட்டத்தட்ட (95 சதவிகித நம்பிக்கையுடன்) 11.2ல் இருந்து 20 பில்லியன் வருடங்களுக்குள் இருக்கும் என அனுமானிக்கிறார்கள்.
விபரங்களுக்கு:
http://www.space.com/scienceastronomy/map_discovery_030211.html
http://www.space.com/scienceastronomy/age_universe_030103.html
நம்முடைய முன்னோர்களின் கணக்கு இந்த அனுமானத்தோடு ஒத்துப் போகிறது. பழம் பெரும் இந்து நூல்களில் இந்தப் பிரபஞ்ஞத்தின் உருவாக்கம், வளர்ச்சி மற்றும் அழிவை ஒரு சுழற்சி எனக் கணித்து, அதை பிரம்மாவின் ஒரு நாள் - ஒரு பகலும், ஒரு இரவும் - கொண்டது எனக் கூறப்பட்டுள்ளது. பிரம்மாவின் நாள் பொழுது 4,320,000,000 வருடங்களுக்கு சமம். இதில் தான் நான்கு யுகங்கள் உள்ளன:
யுகம் : வருடங்கள்
கிருதி யுகம்: 1,728,000
த்ரேதா யுகம்: 1,296,000
த்வாபர யுகம்: 864,000
கலி யுகம்: 432,000
இதற்குப் பின் பிரளயத்தினால் பிரபஞ்ஞம் அழிவதாகவும், அப்போது பிரம்மா உறங்குவதாவதும் சொல்லப்படுகிறது. அவரின் உறக்கம் அவரின் விழித்திருக்கும் நாளுக்குச் சமம் - அதாவது 4,320,000,000 வருடங்கள். இதைப் போன்ற கணக்குகளின் மூலமாக பிரபஞ்ஞத்தின் வயதை 19.252 பில்லியன் வருடங்கள் என அனுமானித்திருக்கிறார்கள். இது விஞ்ஞானிகளின் கணக்கோடு ஒத்துப் போகிறது என்பது தான் ஆச்சரியமான விஷயம்.
விபரங்களுக்கு:
http://www.stnews.org/articles.php?article_id=608&category=commentary
அது மட்டுமல்ல. பழைய நூல்களில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம், சூரியனின் விட்டத்தைப் போல நூற்றியெட்டு மடங்கு எனவும், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம், சந்திரனின் விட்டத்தைப் போல நூற்றியெட்டு மடங்கு எனவும் கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளின் கணக்கு 107.6ல் இருந்து 110.6 என்பதாகும்.
சந்திரனின் விட்டம்: 3479 (கிமீ)
பூமிலிருந்து தூரம் (பூமிக்கு): 384,400 (கிமீ)
சூரியனின் விட்டம்: 1,390,000 (கிமீ)
சூரியனிலிருந்து தூரம் (பூமிக்கு): 149,600,000 (கிமீ)
விபரங்களுக்கு:
http://www.solarviews.com/eng/earth.htm
http://www.solarviews.com/eng/moon.htm
http://hypertextbook.com/facts/2002/SamuelBernard1.shtml
இன்னும் எத்தனை விஷயங்கள் இருக்கின்றதோ? ஆச்சர்யம்தான்!!
மேலும் சில இணைப்புகள்:
http://1stholistic.com/Prayer/Hindu/hol_Hindu-calendar.htm
http://1stholistic.com/Prayer/Hindu/hol_Hindu-creation-of-the-universe.htm
http://www.hindunet.org/alt_hindu/1995_May_1/msg00002.html
5 கருத்துகள்:
பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
ranga
interesting info.
famous cosmologist Dr.Carl Sagan
(Cosmos and Contact fame)
has done exclusive episode on india where he mentions how our ancestors where good with certain observations, he also like Nataraja to explain the cosmic growth and destruction.
கயல்விழி, மூர்த்தி,
பின்னூட்டமிட்டதற்கு நன்றி.
அன்புடன்,
ரங்கா.
டா. கார்ல் சகன் பற்றி தெரிவித்ததற்காக, திரு கே கே நகர் வாசி அவர்களுக்கு என் நன்றி.
ரங்கா, அந்த பழைய நூல்கள் எவை என குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவை தமிழ் சுவடிகளா அல்லது இதர வேத நூல்களா என்பதை அறிய ஆவல். முடிந்தால் அவற்றின் தொடுப்புகளையும் கொடுக்கவும். நன்றி.
நாமெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு சமஸ்கிருதத்தை எதிர்பது மட்டுமே செய்கிறோம்.. REIKI, PRANIC HEALING போன்ற கருத்துக்கள் வெளிநாட்டவர் நம் வேதத்தை உணர்ந்து படித்து கண்ட பலன்கள். நாமெல்லாம் அனுமன் வழி வந்தவர்கள், நம் பலத்தைச்சொல்ல ஒரு ஜாம்பவான் வர வேண்டும்.
அன்புடன் விச்சு
கருத்துரையிடுக