இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்பாக மன்னார்குடியில் தேசியப் பள்ளியில் (நேஷனல்) அறிவியல் ஆசிரியர் பென்சீன் வேதியல் அமைப்பு (மாலிக்யூல் ஸ்ட்ரக்சர்) கண்டுபிடிக்கப்பட்ட விதத்தை விளக்கினார். விஞ்ஞானி ஒரு பாம்பு தன்னுடைய வாலைத் தானே விழுங்குவது போல கனவிலே கண்டாராம். அது அவருக்கு பென்சீன் வேதியல் அமைப்பை விளக்கியதாம். பென்சீன் ஆறு கார்பன் அணுக்கள் கொண்டது. விபரங்களுக்கு இங்கே போகவும். http://www.worldofmolecules.com/solvents/benzene.htm
மூன்று விஞ்ஞானிகளுக்கு 1996ல் வேதியல் நோபெல் பரிசு, அறுபது கார்பன் அணுக்கள் கொண்ட அமைப்பை கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டது. இந்த விஞ்ஞானிகள் இதை "பக்மின்ச்டெர் புல்லர்" என்ற பிரபல கட்டட அமைப்பாளரின் கட்டடங்கள் ஞாபகார்த்தமாக "பக்மின்ஸ்டர்புலரன்ஸ்" என்றும் "புல்லெரீன்” என சுருக்கமாகவும் அழைத்தனர். கட்டடங்கள் அமைப்பு இவர்களுக்கு கார்பன் அணுக்கள் அமைப்புக்கு கோடி காட்டியது! விபரங்களுக்கு: http://www.ul.ie/elements/Issue6/Nobel%20Prize%201996.htm
http://www.godunov.com/Bucky/fullerene.html
சில நாள் முன்பு காப்பி ஆற்றிக் கொண்டிருக்கையில் அந்த நுரையில் இதே "பக்மின்ஸ்டர்புலரன்ஸ்" அமைப்பைப் பார்க்க முடிந்தது!
(நன்றி) http://www.istockphoto.com/file_closeup.php?id=92275
இயற்கையை கூர்ந்து கவனித்தால் பல விஷயங்கள் புலப்படும். கவனிக்கத்தான் தெரியவில்லை!
இதைப்போல் வேறு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்களேன்!
4 கருத்துகள்:
இப்போதுதான் இங்கு முதன்முறை.
நல்ல பதிவு.
இரண்டு எக்ஸ்ரே பிலிம்களுக்கு நடுவில் தோன்றிய நியூட்டன் வளையம்:
http://sundaravadivel.blogspot.com/2004/02/blog-post_02.html
பிள்ளைக்குப் பால் ஆற்றும்போது ஒரு நாள் புட்டியில் பட்டு நிறம் பிரிந்த சூரியவொளி!
வாழ்க்கை அவ்வப்போது அதிசயிக்க வைக்கிறது! தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி சுந்தரவடிவேல். உங்கள் பதிப்பைப் பார்த்தேன். புரிகிறது! படிக்கும் காலத்தில் மார்க் வாங்கும் எண்ணம் இருந்ததே தவிர - அனுபவித்துப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை.
கண்ணதாசன் சொன்னது போல:
"அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில்,
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்?
ஆண்டவன் சற்று அருகு நெருங்கி
அனுபவமே நான் தான் என்றான்"
இப்போதாவது புரிந்ததே என்ற சந்தோஷம் தான்!
Hello,
Just landed on your Blog. It's great to know that you studied in NHSS, Mannargudi. I also studied in NHSS (1980-1985), 1985 +2 Batch. Are you from which year +2 batch ?
My e-mail id: vssravi@gmail.com
Eager to hear from you.
Regards,
-Ravi
Hi Ravi, I did my +2 in the 84 batch.
I had sent an e-mail your G-mail a/c.
Ranga.
கருத்துரையிடுக