வியாழன், டிசம்பர் 01, 2005

தாடகையும் தாரகையே!

விஷ்ணுசித்தரைப் பற்றி (குமரன்) படித்து விட்டு, செய்திகளைப் படிக்கையில் 'எண்ணை உழல்' முதலில் வந்தது - அதனால் இந்தக் கவிதை!

தாடகையும் தாரகையே பெற்றவருக்கு
பெற்றவரும் மற்றவரே இதயமற்றவருக்கு

காதலியும் அம்புலியே செங்கவிக்கு
வெண்ணிலவும் பணியாரமே எம்பசிக்கு

மருந்தே விருந்தாகும் நோயாளிக்கு
விருந்தே மருந்தாகும் பாட்டாளிக்கு

திருமால்தான் தெய்வம் நம்மாழ்வாருக்கு
தரும்'மால்'தான் தெய்வம் ஆள்பவருக்கு!

6 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

வாழ்த்துகள் ரங்கா. கவிதை நன்றாய் எழுதுகிறீர்கள்.

விஷ்ணுசித்தரை சுட்டியதற்கு நன்றி. :-)

ரங்கா - Ranga சொன்னது…

குமரன், பாராட்டுக்கு நன்றி. எழுத ஆசை இருந்தாலும், திறமை போதாது என்பது என் எண்ணம் ;-)

Murali Venkatraman சொன்னது…

ranga:

indhak kavithai arumai. ungaL maTra pathivugaLaiyum padiththu vittu badhil aLikkiRen.

ரங்கா - Ranga சொன்னது…

பாராட்டுக்கு நன்றி முரளி. பின்னூட்டத்தை எதிர் பார்க்கிறேன்.

ரங்கா.

G.Ragavan சொன்னது…

ஆகா! இப்பத்தான் இந்தக் கவிதையைப் படித்தேன். நல்லாயிருக்கு. சூப்பர் ரங்கா!

ரங்கா - Ranga சொன்னது…

நன்றி இராகவன்.