மேலும் சில வார்த்தை தொகுப்புகள் (கவிதைகள்!)
எட்டு வரிக் கவிதைப் போட்டி அறிவித்தபின், அத்தனை கவிதைகளையும் படித்த பின், எனக்குள்ளும் ஒருவிதமான அரிப்பு! பல்லிடுக்கில் மாட்டிய தேங்காய்த் துண்டுபோலாகி விட்டது இப்போது. கவிதை இலக்கணம் தெரியாது - அரைகுறையாக தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் ஞாபகம் இருக்கிறது. வெண்பா எல்லாம் எழுதியதில்லை! வேலையில், எல்லாம் ஆங்கிலம் என்பதால் அதிகமாக தமிழில் பேசக்கூட இல்லை! திடீரென ஒரு உந்தல் - நமக்கும் எழுத வருகிறதே; வரும்போது எழுதிவிடுவோம் என்று! கவிதையே இல்லை என்று கூறினால்கூடப் பரவாயில்லை - கோவையாக எழுத முடிகிறதே என்ற சந்தோஷம் இருக்கிறது. இந்தக் கவிதைகள் (அல்லது வார்த்தைத் தொகுப்புகள்) காரில் போகும் போது, குளிக்கும் போது மற்றும் அலுவலகத்தில் போரடிக்கும் மீட்டிங்கில் இருக்கும் போது வந்த நினைப்புகளில் செதுக்கியது.
கால் சென்டர் வேலை
“தமிழுக்கு அழகே 'ழ'வில்தான் குப்பா” -
அனுபவித்து சொன்னார் ஆசிரியர் அப்பா
“நுனிநாக்கில் பேசாதே! அழுத்தம் தா!!” -
சினந்து திட்டியது திண்ணையில் தாத்தா
படிக்கும்போது என் பேச்சுமுறை நகைச்சுவை
இப்போது நினைக்கையில் எனக்குள் புன்னகை
என் உச்சரிப்பினால் கிடைத்ததே இவ்வேலை
தொலைபேசியை வாஞ்சையாக தடவியது என்கை
வளைவு நிறுத்தமில்லை!
நடந்த சாலை தொலைவில் முடிந்தது
அருகில் சென்றதும் வளைவு தெரிந்தது
'வளைவு நிறுத்தமில்லை' அர்த்தம் புரிந்தது
வாழ்க்கையில் நடக்கத் தெம்பும் வந்தது
பெயர் என்ன?
வேலைக்காக தொலைபேசியில் சிகாகோ ஜான்
ரயிலில் மாற்றுசீட்டுக்காக கோடிவீட்டு ஜமால்
சனிக்கிழமை சீட்டாடும் நண்பர்களுக்கு ஜக்கு
இருந்தாலும் கோபத்தில் அப்பாவிற்கு ஜடம்!
5 கருத்துகள்:
Please visit
http://www.harimozhi.com/
and check out
http://www.harimozhi.com/ListArticle.asp?lngArticleId=21
Thanks Alex. :-) I am going to take some time to read before I try my hand with any other poem!
நல்ல முயற்சி தொடருங்கள். நகைச்சுவையாகமுதலாவதும் மூன்றாவது கவிதையும் தெரிகிறது. இரண்டாவது மிக நன்றாக இருக்கிறது. மூன்றாவது நம்பிக்கை துளிற்க செய்கிறது.
மன்னிக்க வேண்டும் இரண்டாவது கவிதை நம்பிக்கையை துளிற்க செய்கிறது.
தங்கள் பதிவுக்கு நன்றி நளாயினி. எனக்கு கவிதைகள் எழுதிப் பழக்கமில்லை; இப்போது தான் ஒரு நம்பிக்கையே வந்திருக்கிறது :-)
அன்புடன்
ரங்கா.
கருத்துரையிடுக